உலகில் மிகச்சிறிய குழந்தை கண்டுபிடிப்பு!
Saturday, September 10th, 2016
மேற்கு ஜெர்மனியில் பிறந்த ஒரு குழந்தை உலகின் மிகச்சிறிய குழந்தையாக கண்டறியப்பட்டுள்ளது. ஒன்பது மாதத்தில் பிறந்த அந்த குழந்தையின் எடை வெறும் 226 கிராம்தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதாவது கால் கிலோதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த குழந்தையின் பாதம் நமது ஒரே ஒரு விரலை விட மிக சிறியதாக உள்ளது என்றால் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இந்த குழந்தையின் உருவம் எவ்வளவு சிறியதாக இருக்கும் என்று?
ஜெர்மனி டாக்டர்கள் இந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக போராடி வருகின்றனர். இதற்கு முன்னர் 243 கிராமில் பிறந்த குழந்தையே உலகின் மிக சிறிய குழந்தையாக இருந்த நிலையில் இந்த குழந்தை சிறிய குழந்தை என்ற உலக சாதனையை படைத்துள்ளது.

Related posts:
நேபாளத்தின் ஆபத்தான பனி ஏரி வடியச்செய்யப்பட்டது!
எட்டு இலட்சம் பெறுமதியான இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் !
பரம்பரையலகு தொழிற்பாட்டை நிறுத்தும் மாத்திரைக்கு அனுமதி!
|
|
|


