கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவு வளர்ச்சியடைந்துள்ளது!,
Saturday, December 16th, 2023
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவு வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.6 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,946 பில்லியன் ரூபா எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் விவசாயத் துறை 3 சதவீதமாகவும், கைத்தொழில் உற்பத்தித் துறை 0.3 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
000
Related posts:
பயணத் தடை நீக்கப்பட்டதன் பின்னரும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க அனுமதி - பல்கலைக்கழக மானியங்கள் ...
இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தே...
மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்!
|
|
|


