இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தேசிய கொள்கை – உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, September 6th, 2023

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் டீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில் 70% இரசாயன உரம் மற்றும் 30% சேதனப் பசளை என்ற விகிதத்தில் உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஹெக்டயாருக்கு அதிகபட்ச விளைச்சலைப் பெற முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உத்தேச தேசியக் கொள்கையில் இந்த விடயங்களை உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் டீ. வீரசிங்க இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106