கல்லறைக்கான இடத்தை தேர்வு செய்தார் போப் பிரான்சிஸ்!
Friday, December 15th, 2023
போப் பிரான்சிஸ் அவருடைய கல்லறையை தேர்வு செய்திருக்கிறார். ஆனால் அது, இதற்கு முன் போப் பதவி வகித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா அல்ல என தெரிவிக்கப்படுகின்றது
87 வயதுடைய பிரான்சிஸ், ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் என்னுடைய உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன் என்று நேற்று வெளியான அவருடைய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
இதனால், நூற்றாண்டுக்கு பின் வத்திக்கான் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் ஆகிறார்.
முன்பதாக கடந்த 190 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் தவிர்த்து வேறிடத்தில் அடக்கம் செய்யப்பட்டவர் போப் லியோ 8 ஆவார். அவருடைய உடல் ரோமில் உள்ள செயின்ட் ஜான் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
போப் ஆவதற்கு முன்பு, ரோம் நகருக்கு பிரான்சிஸ் செல்லும்போது, ஒரு ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவுக்கு செல்வது வழக்கம்.
2013 ஆம் ஆண்டு போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், அறுவை சிகிச்சை செய்த பின்பும் அவர் ரோமிற்கு சென்று பசிலிக்காவில் வழிபட்டிருக்கிறார்.
இதற்கு முன் வத்திக்கானில் உள்ள பசிலிக்காவில் 7 போப்புகள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என வாத்திக்கானின் அதிகாரப்பூர்வ ஊடக தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106