சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் கொண்டுவருவது பாராட்டத்தக்க விடயமாகும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Monday, March 28th, 2016

ஆபாச வெளியீடுகள் தொடர்பான 1883 தண்டனைச் சட்டக் கோவை மற்றும் 1983 சட்டத்தால் திருத்தப்பட்ட 1927 ஆபாசமான வெளியீடுகள் கட்டளைச் சட்டத்திலுள்ள சட்ட ஏற்பாடுகள் தற்காலத்துக்கு ஏற்றவாறு போதியதாக இல்லாததன் காரணமாக, தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு புதிய சட்ட மூலம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்திருப்பதானது வரவேற்கத்தக்கதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ள ஒரு காலகட்டத்தில் இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் முக்கியமானவை. சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தூண்டுகின்ற பல்வேறு விடயங்கள் நவீன தொழில்நுட்ப புரட்சியுடன் வெகுவாக அதிகரித்துள்ளதொரு கால நிலையில் அதற்கேற்ற வகையிலான சட்ட ஏற்பாடுகள் எமக்கு அவசியமாகின்றன.

இதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களுக்கும், இந்த அரசுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106