பூநகரியில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!
Tuesday, December 12th, 2023
கிளிநொச்சி – பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்காக அவுஸ்திரேலியாவுடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்
இதன்படி ஆயிரத்து 500 மெகாவோட் ஆற்றல் சேமிப்பு அமைப்புடனான 700 மெகாவோட் சூரிய மின்சக்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்காக அவுஸ்திரேலியாவின் யுனைடெட் சோலார் குழுமத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
ஆயிரத்து 727 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்த சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தொழில்நுட்ப பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தனிமைப்படுத்தப்பட்டோருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது - இராணுவ தளபதி!
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் - எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...
|
|
|


