தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு, கட்டான பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த தரவுத்தளம், இணைய ஊடுருவிகளால் அழிக்கப்பட்டிருக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும். எனவே அது தொடர்பிலான உரிய விசாரணைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் முன்னெடுக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இதுவரையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்த வகையான தடுப்பூசி என்று பார்த்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் மையத்திற்கு சென்று, ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதனால், வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள், மக்கள் கூடி இருந்தால், அந்த இடத்தில் தேநீர் அருந்தவோ அல்லது தண்ணீர் அருந்தவோ முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் என இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106