அடுத்த வருடத்திற்காக அரச அதிகாரிகளுக்கு விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானம்!
Sunday, December 10th, 2023
அடுத்த வருடத்திற்காக அரச அதிகாரிகளுக்கு விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 4,000 ரூபா முன்பணமாக வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்பண தொகை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 29 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.
திறைசேரியின் இணக்கப்பாட்டுக்கு அமைய பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் இது குறித்து அறிவித்துள்ளார்.
இந்த முன்பணத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் வசூலிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சுற்றுலாத்துறை விரைவில் வழமைக்குத் திரும்பும் - சுற்றுலா அதிகார சபை!
அடிப்படை அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றனர் - அமைச்சர் ஹரி...
ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!
|
|
|


