அடிப்படை அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றனர் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, August 17th, 2023

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க முடியாது. அதை முழுமையாக அமுல்படுத்தியே தீர வேண்டும். அடிப்படை அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றனர்.” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“தமிழ்த் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க படிப்படியாக நிறைவேற்றி வருகின்றார். அதேபோல் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

இந்நிலையில், 13 தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து முட்டிமோதுவதை ஆளும் – எதிரணி எம்.பிக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.” – என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


காக்கைதீவில் மீன் சந்தை வேண்டாம் - கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன...
இக்கட்டான காலத்தில் யாழ். மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததை இன்று மேலும் வலுவடையச் செய்துள்ளார் அமைச்சர் ...
பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருவத்துவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!