ஹஜ் யாத்திரையை ஈரான் புறக்கணிப்பு!
Saturday, September 10th, 2016
இந்த ஆண்டுக்கான சவுதி அரேபியாவின் ஹஜ் புனித யாத்திரை நேற்று (09) ஆரம்பமாகியது.
புனித நகரங்களான மக்கா மதினாவை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு நூற்றுக்கணக்கானவர்கள் நெரிசலில் சிக்கி பலியானார்கள். அவர்களில் பலர் ஈரானியர்கள்.
சவுதி அரேபிய அரசாங்கம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய ஈரான், இந்த ஆண்டு தன் நாட்டைச்சேர்ந்த யாரையும் மக்காவுக்கு செல்ல அனுமதிக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
உலக பிரபல்யம் ஒன்று 2021 ஆண்டு வரை மூடப்படுகிறது!
பிரித்தானியா பேரிழப்பை சந்திக்கும் என முன்னணி விஞ்ஞானி நீல் பெர்குசன் எச்சரிக்கை!
அபுதாபியில் ட்ரோன் மூலம் தாக்குதல் - ஐ.நா.சபை கண்டனம்!
|
|
|


