துஷ்பிரயோகம் மற்றும் கடும் தண்டனைகளை அனுபவித்தோம் – இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனிய தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023

இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியினில் தாங்கள் துஷ்பிரயோகம் மற்றும் தண்டனைகள் என்பவற்றை அனுபவித்ததாக இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனிய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாசினால், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனை அடுத்து தாங்கள் தடிகளால் தாக்கப்பட்டதாகவும் தங்கள் மீது நாய்கள் ஏவப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உடைகள் மற்றும் போர்வைகள் என்பன பறிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர் தமக்கு பாலியல் வன்புணர்வு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், சிறைச்சாலையினுள் இரு முறை கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் பாலஸ்தீனியர்கள், சர்வதேச சட்டங்களுக்கு அமையவே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106