பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம்!

Wednesday, November 29th, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் கடமையாற்றி வந்த நிலையிலேயே அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்த பின்புலத்திலேயே இன்று இந்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த 25ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதால் வெற்றிடமாகவுள்ள மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தளபதி வருண ஜயசுந்தர நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இதனிடையே பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படும் அதிகாரியின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி 60 வருட சேவையை பூர்த்தி செய்யாத பட்சத்தில் மேற்கண்ட தீர்மானம் அந்த அதிகாரிக்கும் பொருந்தும்,  அதன்படி அவர் பொலிஸ் மா அதிபராக பதவியேற்று மூன்று வருடங்கள் கழித்து ஓய்வு பெற வேண்டும்.

அமைச்சர்கள் சபையினால் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, எதிர்காலத்தில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் எந்தவொரு அதிகாரியின் சேவைக் காலம் அதிகபட்சமாக 3 வருடங்கள் வரை மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106