டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Wednesday, November 29th, 2023
கடற்றொழிலாளர்களுக்கு உதவியாக அமையும் பல சேவைகளை உள்ளடக்கிய மிகவும் அவசியமான செயலியை டயலொக் நிறுவனம் தயாரித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு குறித்த செயலியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் டயலொக் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில்,
படகுகளில் கடலுக்கு செல்லும் தொழிலாளர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ள நேர்ந்தாலோ அல்லது அவசர உதவிக்கான கோரிக்கையை அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பது வரவேற்புக்குரியதாகும், அதேவேளை அனர்த்தங்கள் குறித்த அறிவிப்புகளை கடலில் இருப்பவர்களுக்கு வழங்குவதற்கும் இந்தச்செயலி உதவும் என்று தெரிகின்றது.
அதனோடு தொடர்புபட்ட பத்து வகையான வசதிகள் இந்தச் செயலியில் காணப்படுவதை வரவேற்கும் அதேவேளை எதிர்காலத்தில் மீன்கள் எங்கு இருக்கின்றன எனபதையும் கடற்றொழிலாளர்கள் அடையாளம் காணவும் வசதிகளை டயலொக் நிறுவனத்தினர் தயாரித்து வழங்க முயற்சிப்பார்கள் என்று நம்புவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106