நலிவுற்றுள்ள அனைத்து இயக்க போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதியிடம் விசேட நிதி ஒதுக்கீட்டை கோரவுள்ளோம் – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023

வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து இயக்க போராளிகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியில் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக விசேட நிதி ஒதுக்கீட்டை ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்..

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு விஷேட நிதி ஒதுக்கீடு உள்ளது போல அழிவு யுத்தத்தில் உயிர் நீத்த அல்லது நிரந்தர பாதிப்புகளை சந்தித்துள்ள அனைத்து இயக்க போராளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யுமாறே ஜனாதிபதியிடம் கோரவுள்ளோம். இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அதேபோன்று எமது இனத்தின் உரிமைக்கான யுத்தத்தில் உயிர் நீத்த அனைத்து இயக்க போராளிகளினதும் நினைவாக பொதுத் தினம் ஒன்றை அங்கிகரிக்குமாறு தலைவர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஊடாக அங்கிகாரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார். பெரும் விவாதத்தின் பின்னர் நாடாளுமன்றம் அதற்கு அங்கீகாரமும் வழங்கியுள்ளது.

ஆனாலும் பின்னர் ஏற்பட்ட கொரோனா தாக்கங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் ஆட்சி மாற்றங்கள் காரணமாக அந்த பிரேரணை நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து இயக்க போராளிகள் பொதுமக்களை நினைவு கூரும் பொதுத் தினத்தை செயற்படுத்த சமூகத்திலுள்ள புத்திஜீவிகள் சமூக அக்கறையாளர்கள் சமயத் தலைவர்கள் என அனைவரும்பங்காற்ற வேண்டும்.

அதனூடாக கல்லறைகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக ஒளியேற்றிக் கொண்டிருக்காமல் கனவுகளை சுமந்த மக்களுக்காகவும் எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்ற அனைவரும் முன்வரவேண்டும்.” எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106