ஜனாதிபதி ரணில் அடித்தாடுகின்றார் – அவரை ஆட்டமிழக்க வைக்கவே பலர் முற்படுகின்றனர் – அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டு!
Thursday, November 23rd, 2023
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தனித்து சவாலை ஏற்று 200 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச்சென்ற அவுஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் போல்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தனித்து சவாலை ஏற்று, செயற்பட்டு வருகின்றார் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் –
“ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல்லுக்கு தட்டிக்கொடுப்பதற்கு அவுஸ்திரேலிய அணித்தலைவர் களத்தில் இருந்தார். ஆனால் அந்த பாத்திரத்தை ஏற்பதற்கு இலங்கையில் எவரும் இல்லை. ரணில் அடித்தாடுகின்றார், அவரை ஆட்டமிழக்க வைக்கவே பலர் முற்படுகின்றனர்.
நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க முடியாமலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பை ஏற்க சிலர் முற்படுகின்றனர். அவர்கள் யார் என பெயர் கூற விரும்பவில்லை.
கிளென் மேக்ஸ்வெல் தனித்து ஆடினார். இறுதியில் தொடர் வெற்றிகளை பெற்ற இந்திய அணியையும் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தை வென்றது.
அதே பாணியில் ஆடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நிச்சயம் வெல்வார். நாட்டை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உண்டு.
நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத் திட்டம் மீதான உரை இடம்பெற்றாலும் கிரிக்கெட் பற்றியும், கோப் குழு பற்றியுமே இங்கு அதிகம் பேசப்படுகின்றது” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106