சிறுவர் தொடர்பில் வருடாந்தம் 5 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் எச்சரிக்கை!

Monday, November 20th, 2023

இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் தொடர்பான சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் கையடக்கத்தொலைபேசி பாவனையே இவ்வாறான பல குற்றச் சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் வருடாந்தம் சிறுவர்களுக்கு எதிராக சுமார் 5000 குற்றங்கள் பதிவாவதாக இந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நமது நாட்டில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள போதைப்பொருள் பிரச்சினையே சிறுவர் துஷ்பிரயோகத்தை பாதித்துள்ள மிகப்பெரிய காரணியாகும்.

இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம், மேல் மாகாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்தை கருத்தில் கொண்டால், சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பற்றிய புரிதல் எமக்கு இருப்பதால் நிலமை தெரியும்.

மேலும், பெரும்பாலான வழக்குகளுக்கு போதைப்பொருள் மற்றும் மதுபான பயன்பாடு காரணியாக அமைந்துள்ளன.

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லும் ஆபத்தான ஆயுதமாக கையடக்கத்தொலைபேசிகளின் பயன்பாடு மாறியுள்ளது.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைப்பதற்கு நாம் முயற்சி எடுத்தால், பெற்றோர்கள் கண்டிப்பாக வீட்டில் சிறுவர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106