முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி – புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை!

Saturday, November 18th, 2023

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

தற்போதைய காலநிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெற்று வருகின்றது. மழை இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதேநேரம் இன்றையதினம் சனிக்கிழமை காலை 7 மணியளவில் இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகவுள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 21.11.2023 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமான மற்றும் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106