உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் நாளை இலங்கை வருகை !

Saturday, November 18th, 2023

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளது. குறித்த கப்பல், எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உல்லாச பயண துறையை ஊக்குவிக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இலங்கைக்கு இந்த கப்பல் வருகைதரவுள்ளது.

மேலும், உல்லாச பயண துறையில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனமான YARA GLOBAL (pvt Ltd) நிறுவனத் தலைவர் H.M.Riyaldeen இந்தக் கப்பலுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதனடிப்படையில், இலங்கை வரும் உல்லாச பயணிகளை இலங்கையின் சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யவும், இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடலும் உல்லாச பயணிகளோடு மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரியவருகிறமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106