யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த மூன்று உணவகங்கள் மற்றும் வெதுப்பகம் -நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டது!

Friday, November 17th, 2023

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் என்பவற்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளான காங்கேசன்துறை வீதி , மற்றும் இராமநாதன் வீதி ஆகிய பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் திடீர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன் போது மூன்று உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் என்பவை சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருவதை அவதானித்து உள்ளனர்.

குறித்த உணவு கையாளும் நிலையங்களுக்கு ஏற்கனவே சில சுகாதார சீர்கேடுகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கி இருந்தனர்.

இருந்த போதிலும் அவற்றை நிவர்த்தி செய்யாததால் , அவற்றுக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, நான்கு உணவு கையாளும் நிலையங்களிலும் காணப்படும் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யும் வரையில் அவற்றுக்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்ட மன்று, வழக்கினை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106