2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுமுதல் ஆரம்பம்!
Tuesday, November 14th, 2023
இன்றுமுதல் 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது.
முன்பதாக நேற்றைய தினம், நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.
இந்தநிலையில், பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுமுதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. வாரத்தில் ஞாயிறு தவிர்ந்து மீதமுள்ள ஏனைய நாட்களில் விவாதம் இடம்பெறவுள்ளது.
அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
அதனையடுத்து, குழுநிலை விவாதம் 22ஆம் திகதி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரையில் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய, 2024 நிதியாண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106