நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வலியுறுத்து!
Thursday, November 9th, 2023
கடல்துறை தொடர்பான சர்ச்சைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து கடலில் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கக்கூடாது என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்சீனக் கடலில் சீன ஆதிக்கப் போக்குடன் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதாக பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
தென்சீனக் கடலின் பெரும்பகுதி தனது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதனை பல நாடுகள் எதிர்க்கின்றன.
கடந்த மாதம் தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் கடந்து செல்ல முடியாதபடி சீன கப்பல்கள் வழிமறித்தன. இதன் விளைவாக நிகழ்ந்த விபத்து குறித்து இருநாடுகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டது.
குறித்த பிலிப்பைன்ஸ் கப்பல்கள் தனது எல்லைக்குள் அத்துமீறியதாக சீனா குற்றம் சாட்டியது. “நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும்.
கடலில் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்,” என்று ஹைனான் தீவில் நடைபெற்ற கடல்துறை கருத்தரங்கில் சீன வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106