நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டு!

Wednesday, November 8th, 2023

நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

செவனகல சீனி தொழிற்சாலைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனி தொழிற்சாலையை நெருங்கிய நண்பருக்கு விற்கப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியதாக ஊடகவியலாளர்கள் திலும் அமுனுகமவிடம் கேள்வி எழுப்பினர்.

இந்த நிறுவனத்தை விற்க நாங்கள் தயாரில்லை, இலாபம் ஈட்டும் நிறுவனம், விற்பனை பட்டியலில் உள்ளது உண்மைதான், அதை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். நான் இதில் இருக்கும் வரை இதை விற்க விடமாட்டேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்து.

000

Related posts:

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத...
கொழும்பு - யாழ். மாவட்டங்களில் அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் - இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் எச்...
க.பொ.த சா/த பரீட்சை எழுதிய முதல்நாளில் மாணவ, மாணவிகளிடம் மர்மநபர்கள் அத்துமீறல் – யாழில் சம்பவம்!

உலகில் பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்த ராஜப...
நாட்டில் 29 இலட்சத்து 16 ஆயிரத்து 330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளத...
பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் - கல்வி அமைச்சர் சுசில் ப...