அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரை ஹமாஸ் தரப்பினருடன் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!

Saturday, November 4th, 2023

சகல இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரையில் ஹமாஸ் தரப்பினருடன் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டணி பிளிங்கனுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பொது மக்களை பாதுகாப்பதற்காக மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் குறித்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, காஸாவில் நோயாளர் காவு வண்டிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அல்-ஷிஃபா வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நோயாளர் காவு வண்டிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106