காக்கைதீவு – சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கைச்சாத்து!

Thursday, November 2nd, 2023

காக்கைதீவு  மற்றும் சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் அண்மைக்காலமாக நிலவிவந்த தொழில்சார் முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

காக்கைதீவில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் இறங்குதுறை மற்றும் மீன் விற்பனை சந்தை போன்றவற்றை பகிர்ந்து கொள்வதில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் சுமூகமான தீர்விற்கு சம்மந்தப்பட்ட இரண்டு தரப்புக் கடற்றொழிலாளர்களும் சம்மதம் தெரிவித்த நிலையிலேயே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த முரண்பாட்டினை தீர்க்கும் முயற்சியில், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மானிப்பாய் பிதேச சபை செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்ததின் யாழ் மாவட்டத்திற்கான பணிப்பாளர் உட்பட சம்மந்தப்பட்ட தரப்புக்களும் கலந்துகொண்ட நிலையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலக மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வரி அறவீடுகள் என்பது நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும் - டக்ளஸ் எம்பி வலியுறுத்து...
நல்லாட்சி வழங்கிய தொழில் வாய்ப்புக்களை நம்பியதால் நடுவீதியில் நிற்கின்றோம் - பாதிக்கப்பட்டவர்கள் அமை...
நெடுந்தீவிற்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் - இவ்வாண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு...