இன்றுமுதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலைகளிலும் மாற்றம்!
Wednesday, November 1st, 2023
இன்றுமுதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒடோ டீசல் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 356 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சுப்பர் டீசல் 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 431 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பளை பொது மருத்துவமனையில் விடுதிகள் இன்மையால் நோயாளர்கள் பெரும் சிரமம்!
கொரோனாவை தொடர்ந்து சீனாவினை புரட்டி எடுக்கும் கனமழை!
‘106 ஆவது பொன் அணிகளின் போர்’ நாளை வட்டுக்கோட்டையில் ஆரம்பம்!
|
|
|


