பெறுமதி சேர் வரி விகிதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, October 31st, 2023
பெறுமதி சேர் வரி விகிதத்தை 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வரி வசூல் இலக்குகளை அடைய முடியவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம், வரி வருமானம் மற்றும் முதன்மை சமநிலை இலக்குகளை அடைவதற்காக VAT ஐ அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், 01.01.2024 முதல் பல புதிய வரி முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106