சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் – தனியார் பேருந்தொன்று நெல்லியடிப் பகுதியில் விபத்து!
Tuesday, October 31st, 2023
யாழ்ப்பாணம், கொடிகாமம் – பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை நெல்லியடிப் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின்போது பேருந்தில் குறைந்தளவான பயணிகள் பயணித்துள்ளனர். கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை நெல்லியடி முள்ளிப் பகுதியில் குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற நிலையில் அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் பேரூந்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
விபத்தின் போது பெரியளவில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விபத்து சம்பவம் குறித்து நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
000
Related posts:
எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை இந்தியாவில் முழு அளவிலான முடக்க நிலை நீடிப்பு.!
கொரோனா நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும்!
இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவு - புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தே...
|
|
|


