ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!
ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு (29) இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது விஜயநகரம் பகுதியில் வைத்து ஒடிசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயிலொன்று மோதிய போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன் போது 3 பெட்டிகள் தடம்புரண்டுள்ள நிலையில் அதில் பயணித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும்,லோசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் இந்திய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106