பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Monday, October 23rd, 2023
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநாட்டுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் திட்டத்திற்கு இலங்கை முழுமையாக ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மதத்தினரையும் சமமாக கருதி ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீன் ஏற்றுமதிக்கு 15சதவீத வரிச்சலுகை!
உயர் தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியானது
இலஞ்சம் பெற்றதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்ப...
|
|
|
கொரோனாவை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டத்தக்கது - அமைச்சர் ஹெகலிய தெரிவிப்பு!
இலங்கையின் முயற்சிகளின் வெற்றியில், இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் - தெ ஹிந்துஸ்தான் ...
கடற்படையினரை பயன்படுத்தி எல்லை தாண்டும் இந்திய மீன் பிடியாளர்களை கட்டுப்படுத்துங்கள் - அமைச்சர் டக்ள...


