தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை – வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ் தெரிவிப்பு!

Saturday, October 14th, 2023

தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

நாளை 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வடக்கில் இம்முறை 71 இணைப்பு நிலையங்களும் 209 பரீட்சை மண்டபங்களும் செயல்படவுள்ளது.

இவ்வாறு செயல்படும் பரீட்சை மண்டபங்களிலேயே இந்த 18 ஆயிரத்து 759 மாணவர்களும் தோற்றவுள்ளனர்.

இதேநேரம் வடக்கில் பரீட்சைக்குத் தோற்றும மாணவர்களில் யாழ்ப்பாணம் ஒன்று வலயத்தில் 12 இணைப்பு நிலையங்களின் கீழ் 41 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 782 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் அதேநேரம் யாழ்ப்பாணம் 02 வலயத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 54 பரீட்சை நிலையங்களில் 5 ஆயிரத்து 208 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2ஆயிரத்து 219 மாணவர்களும், முல்லைத்தீவில் 09 இணைப்பு நிலையங்களின் கீழ் 24 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 162 மாணவர்களும்,

வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களின் கீழ் 34 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 212 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் அதேநேரம் மன்னாரில் 16  இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 176 மாணவர்கள் தோற்றுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேநேரம் நாளை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உரிய வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரிடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106