ஹமாஸ் அமைப்பு தெற்கு இஸ்ரேல் மீது ரொக்கட் குண்டு தாக்குதல் – பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் பிரகடனம் !
Saturday, October 7th, 2023
பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் அமைப்பு தெற்கு இஸ்ரேல் மீது இன்று ரொக்கட் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன் அதிகளவிலான போராளிகள் அந்த பிரதேசத்திற்குள் ஊடுருவியுள்ளனர்.
காஸாவில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ரொக்கட் குண்டுகள் ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையை அடுத்து உடனடியாக பாதுகாப்பு பிரதானிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் செயலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் அனைத்து குற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம், இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை மீண்டும் ஆக்கிரமிப்பதற்கான நேரம் வந்து விட்டதாகவும் ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
மேலும் ஒப்பரேஷன் அல்-அக்ஸாவை அறிவித்துள்ளோம், 20 நிமிடத்தில் 5 ஆயிரத்திக்கும் மேற்பட்ட ரொக்கட்டுகளை வீசினோம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
காஸா பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேல் எல்லையில் உள்ள தமது வீடுகளை விட்டு வெளியேறியதை அடுத்து, கடலோரப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரியாக ரொக்கட் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106