படித்த புத்திசாலிகள் இலங்கையில் இருந்து மட்டுமே வெளியேறுகின்றனர் என்று காண்பிக்க எதிர்க்கட்சி முயற்சி – ஏனைய நாடகளிலும் இது நடக்கின்றது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டு!

Saturday, October 7th, 2023

கொத்து ரொட்டியை போடும் விதத்தில் அவசரமாக பொருளாதாரத்தை மேம்படுத்தி புத்திசாலிகளின் வெளியேற்றத்தை தடுத்து விட முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

படித்த தொழில்சார் நிபுணர்கள் நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது உலகளாவிய போக்காக மாறியுள்ளது. அமெரிக்கா,இங்கிலாந்து, இந்தியாவில் கூட இது நடக்கின்றது.

படித்த புத்திசாலிகள் இலங்கையில் இருந்து மட்டுமே வெளியேறுகின்றனர் என்று காண்பிக்க எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இப்படியான விடயங்களை சமூகமயப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மினுவங்கொடை , பேலியகொட கொத்தணிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி - இராணுவத் த...
கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது - சீமாட்டி றிஜ்வே வைத்தியசாலைவைத்...
நாடாளுமன்றத் தேர்தலே நெருக்கடி நிலைக்கு தீர்வு – முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!