இலங்கையில் ஆண்களுக்கு தட்டுப்பாடு – திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக பேராசிரியர் இந்திரலால் டி சில்வா எச்சரிக்கை!
Friday, February 16th, 2024
நாட்டில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் திருமண வீதம் மற்றும் பிறப்பு வீதம் ஆகியன படிப்படியாகக் குறைந்து வருகின்றது. புதிதாகப் பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் குறைந்துள்ளது.
தற்போது நாட்டில் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு தகுதியான ஆண் ஒருவரை தேடுவது கடினம்.
அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் இளைஞர் சனத்தொகையில் கணிசமான குறைவைக் காண முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமனம்!
சுதேச தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் அணிசேரா நாடுகளின் விஞ்ஞான, தொழ...
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ் விஜயம் - கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் கண்காணிப்பு!
|
|
|


