தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Tuesday, October 3rd, 2023
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில், அடிப்படை உரிமை மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
கடந்த மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டதன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்கக் கோரி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு ஆகியன குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
Related posts:
அசாதாரண சூழ்நிலை விரைவில் தணிக்கப்படும் - பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் !
அரச கணக்காய்வாளராக சுலந்த விக்ரமரத்ன!
பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் - தேர்தல்கள் ஆண...
|
|
|


