கொத்தலாவல பல்கலைக்கு சைட்டம் மாணவர்கள் இணைப்பு!
Friday, February 23rd, 2018
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எடுக்கப்பட்டதாக ஜனாதிபதிஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தற்போது சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்கும் சுமார் 1000 மாணவர்களின் தகைமைகளைப் பரிசீலித்து அதற்கமைய கொத்தலாவல பாதுகாப்புக்கல்லூரியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எல்லை நிர்ணயம் குறித்து தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு!
நாளை மின்சாரம் தடைப்படும்!
காழ்ப்புணர்வுகளால் மக்கள் நலன்கள் தடுக்கப்படுவதை ஏற்கமுடியாது – சபை அமர்வில் ஈ.பி.டி.பியின் யாழ் மாந...
|
|
|


