உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டம் தற்போதுக்கு இல்லை -பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!
Tuesday, October 3rd, 2023
உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டம் தற்போதுக்கு இல்லை என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் வீரா்களுக்கு பயிற்சியளிப்பதற்காக பிரித்தானிய படையினா் அந்த நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்று பாதுகாப்பு அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் கூறியிருந்த சூழலில் அந்த கருத்தை திரும்ப பெறும் வகையில் இதை சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் சுனக் கூறுகையில் – உக்ரைன் வீரா்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக வீரர்களை அங்கு அனுப்புவதற்கான திட்டம் தற்போதைக்கு இல்லை.
இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் கூறிய கருத்து, என்றாவது ஒரு நாள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மட்டுமே பிரதிபலிக்கிறது.
எதிர்காலத்தில் உக்ரைன் வீரா்களுக்கு அந்த நாட்டில் பிரித்தானிய இராணுவத்தினா் பயிற்சியளிக்கலாம் என கூறியுள்ளார்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106