யூரோ நாயகர்களை பந்தாடியது சுவிஸ்சர்லாந்து!
Thursday, September 8th, 2016
2018 உலக கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் யூரோ சாம்பியனான போர்த்துக்கல் அணி சுவிஸ்சர்லாந்திடம் தோல்வியடைந்தது.
32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் யூரோ சாம்பியனான போர்த்துக்கல் அணி, சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. காயம் காரணமாக போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் 24வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ முதல் கோல் அடித்தார். இதைதொடர்ந்து 30வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் வீரர் அட்மிர் மிமிதி கோல் அடித்தார். போட்டியின் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து போராடிய போர்த்துக்கல் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிப்பெற்றது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106