உரிய நேரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் – ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Friday, September 29th, 2023
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் விடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவிக்கையில்,
இந்தாண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட போதும், அதற்கான நிதி ஒதுக்கப்படாததன் காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு மையப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்” உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.
ஆனால் அடுத்து தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது குறித்து இப்போது கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106