நீண்ட வார இறுதி விடுமுறை – நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் – பொலிசார் அறிவுறுத்து!
Friday, September 29th, 2023
நீண்ட வார இறுதி விடுமுறையால் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே பொலிசார் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வாகனங்களை செலுத்தும் போது உரிய போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறும் அவர் கோரியுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவுகின்றது. எனவே, வாகனங்களை அதிக வேகத்தில் செலுத்துவது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது, மது போதையில் வாகனத்தை செலுத்துவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்களின் நன்மை கருதி, நாடளாவிய ரீதியில் அதிகளவான போக்குவரத்து பிரிவிலுள்ள காவல்துறையினர் கடமையில், ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106