சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் நேபாள அணி உலக சாதனை!
Wednesday, September 27th, 2023
சீனாவில் இடம்பெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரில் நேபாள அணியின் வீரர் திபேந்திரா சிங் 9 பந்துகளில் அரை சதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
9 பந்துகளை சந்தித்த திபேந்திரா சிங் 8 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக அதிவேக அரை சதத்தை எட்டினார்.
இதன்மூலம் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையை திபேந்திரா சிங் தன்வசப்படுத்தியுள்ளார்.
அத்துடன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை குவித்த அணி என்ற சாதனையையும் நேபாளம் அணி பெற்றுள்ளது.
நேற்று மொங்கோலியாவிற்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் நேபாளம் அணி 314 ஓட்டங்களை குவித்தது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கெதிராக ஆப்கானிஸ்தான் அணி பெற்ற 278 என்ற ஓட்டமே அதிகூடிய ஓட்டமாக காணப்பட்டது. இதனை நேபாளம் அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106