ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் – பல்வேறு விடயங்கள் தொட்ர்பில் இறுதித் தீர்மானம்!

Monday, September 25th, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டம் கூடியது

முன்பதாக இந்நிலையில் குறித்த அமைச்சரவை கூட்டமானது இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான இரண்டாம் தவணைக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் போது, இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே ஐ.நா.வின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்தமையினால் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106