சமுர்த்தி வங்கி கட்டமைப்பில் பாரிய நிதி மோசடி – 107 மோசடிகள் இருபத்தி மூன்று கோடிக்கு மேல் இழப்பு எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல்!
Monday, September 25th, 2023
தேசிய கணக்காய்வு அலுவலகம் செப்டம்பர் 18 அன்று வெளியிட்ட புதிய கணக்காய்வு அறிக்கையின்படி, சமுர்த்தி வங்கிகள் மற்றும் சங்கங்களை கொண்ட 2,000 சங்கங்களில் நடந்ததாகக் கூறப்படும் 107 மோசடிகள் இருபத்தி மூன்று கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என தேசிய கணக்காய்வு அலுவலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, 2014 ஜனவரி 03ம் திகதி முதல் 2015 ஜூலை இறுதி வரை இடம்பெற்றுள்ள 15 மோசடிகளில் பதினைந்து கோடி ரூபாய்க்கு மேலான பணமும், 2019 முதல் பெப்ரவரி 2020 வரையான காலப்பகுதியில் 92 மோசடிகளில் பதினேழு கோடி ரூபாய்க்கு மேல் மோசடிகளில் இடம்பெற்றுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிநபர்கள் வேண்டுமென்றே செய்யும் தவறுகள் மற்றும் நிதி மோசடிகளை குறைக்க எதிர்பார்த்தாலும், அந்த மோசடிகளில் எந்த குறையும் இல்லை என்பதையும் கணக்காய்வு அறிக்கை காட்டுகிறது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106