இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பின்றி அறிக்கை விடுகின்றன – வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன குற்றச்சாட்டு!
Thursday, September 21st, 2023
நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்கள், மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் என இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பும் இன்றியும் சாட்சியங்களும் இன்றி அறிக்கை விடுகின்றன என வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் 1989 மஹஜன எக்சத் பெரமுன ஊடாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்து நாடாளுமன்றின் பெயருக்கும் நாட்டின் பெயருக்கும் கௌரவத்தினை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் வகையில் உள்ள அமைச்சர்.
ஒரு நூல் துண்டையாவது திருடாத நான், ஐம்பது சதமாவது நான் மோசடி செய்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு நான் இந்த நாடாளுமன்றுக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி அடிக்கடி கூறியுள்ளேன்.
எனது பிள்ளைகள் இந்த நாட்டில் அரசியல் செய்வதில்லை. நான் மட்டும் தான் இறுதியாக அரசியலில் உள்ளவன். இதனை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் பாராளுமன்றத்தில் மட்டுமன்றி என்றைக்கும் அரசியல் செயற்பாட்டில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதனை அறிந்து ஊடக நிறுவனங்கள் தொடர்ந்தும் செயற்படுவது வருத்தமளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106