விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளை அதகரிக்க நடவடிக்கை – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவிப்பு!

Wednesday, September 20th, 2023

விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளை இந்த ஆண்டிலிருந்து அதிகரிக்கவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 22 மில்லியன் சனத்தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சுமார் 30 சதவீதமான விசேட தேவையுடையோர், சுயதொழில் செய்பவர்கள் அல்லது தொழிலில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.

எனினும், இலங்கையில் 3 சதவீதமான விசேட தேவையுடையவர்களே தொழிலில் ஈடுபடுவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இந்தநிலையில், குறித்த எண்ணிக்கையை 10 சதவீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதுநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரியளவில் பங்களிப்பு செய்யும் என இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவெல் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு வழமையாக சமூக நலன்புரி நன்மைகளுக்கு மேலதிகமாக வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுயதொழில் உதவியாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 45 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவெல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106