ரஷ்ய போர் விமான தயாரிப்பு ஆலை, கடற்படை தளங்களுக்கு கிம் ஜோங் உன் விஜயம் – ஆயுதப் பரிமாற்றத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Sunday, September 17th, 2023

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அந்த நாட்டு கடற்படை தளத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமான தயாரிப்பு ஆலையைத் தொடர்ந்து, கடற்படை தளத்துக்கு கிம் ஜோங் உன் விஜயம் செய்யவுள்ளமை இரு நாடுகளுக்கிடையே ஆயுதப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியா மற்றும் ரஷ்யாவுக்கிடையில் இராணுவ தளபாடங்கள் பரிமாற்றம் நடைபெறும் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு வருகின்றன.

இந்த நிலையில், கொசோமோல்ஸ்க்-ஆன்-அமூா் நகரிலுள்ள போா் விமானத் தொழிற்சாலையை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நேற்றைய தினம் நேரில் சென்று பாா்வையிட்டிருந்தார்.

இந்த ஆலையில் உள்ள எஸ்யு-35 ரக சண்டை விமானமொன்றின் செயற்பாடுகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டுள்ளதோடு, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் அவர் பார்வையிட்டுள்ளார்.

இந்த நிலையில், கிம் ஜோங்-உன் தற்போது ரஷ்யாவுக்கான கடற்படை தளத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உக்ரைனுடனான போரில் பயன்படுத்துவதற்கான ஆயுத கையிருப்பு ரஷ்யாவிடம் குறைந்து வருவதாலும், பொருளாதாரத் தடைகள் காரணமாக அவற்றை பிற நாடுகளிலிருந்து வாங்க முடியாததாலும் வட கொரியாவிடமிருந்து ஏவுகணைகள் மற்றும் விமான எதிா்ப்பு எறிகணைகளை வாங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106