இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் – கனேடிய வர்த்தக்கத்துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!
Sunday, September 17th, 2023
இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ள நிலையில், கனேடிய வர்த்தக்கத் துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டிற்கும் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த அடுத்த மாதம் கனேடிய வர்த்தகத் துறை அமைச்சர் மெரி நக் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தார்
ஆனால், ஜி20 மாநாட்டின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவால் புறக்கணிக்கப்பட்டதையடுத்து கனேடிய வர்த்தகத் துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மெரியின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை கனடா அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.
ஜி20 உச்சி மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் உள்ள இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் வருவதாகவும் இது தொடர்பாக கனடா அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்ரூடோவிடம் மோடி வலியுறுத்தினார்.
காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது.
இதனைத் தொடர்ந்து ஜி20 மாநாட்டை நிறைவு செய்த பின் பிற நாடுகளின் தலைவர்கள் சொந்த நாடு சென்ற நிலையில், விமானக் கோளாறு காரணமாக ட்ரூடோ கனடா செல்வதில் கால தாமதம் ஏற்பட்டது.
திட்டமிட்ட காலத்தை கடந்து அவர் 2 நாட்கள் கழித்து இந்தியாவில் இருந்து புறப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106