22 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெறும் தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு இலங்கையில்!
Sunday, September 17th, 2023
தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு (South China Sea Buddhist Shenzhen Roundtable) எதிர்வரும் அக்டோபர் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெற உள்ளது.
குறித்த இந்த மாநாடு கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையினால் நடத்தப்பட இருப்பதோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த வட்டமேசை மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
அத்துடன் சீனாவின்ஷென்ஸன் வட்டமேசை மாநாடு வருடாந்தம் நடைபெற்று வருவதோடு ஒற்றுமையுடன் ஒன்றாக பயணித்து பட்டுப்பாதையின் ஞானத்தை பெறுவோம் (Walk Together in Harmony and Gather the Wisdom of the Silk Road) என்ற தொனிப்பொருளின் கீழ் 22 நாடுகளின் பங்கேற்புடன் இம்முறை மாநாடு இலங்கையில் நடைபெறும் என்றும் இதன் போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106