சனல் 4′ முன்வைத்த குற்றச்சாட்டு – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் வழங்கத் தயார் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!
Saturday, September 16th, 2023
சனல் 4′ ஊடகம் என் மீது முன்வைத்துள்ள போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் தொடர்பான ‘சனல் 4’ தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள ஆணைக்குழு தொடர்பில் கோட்டாபய கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “என் மீதான போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்த விசாரணைக் குழு முன்னிலையிலும் வாக்குமூலம் வழங்கத் தயாராகவுள்ளேன்.
எனவே, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்னை அழைத்தால் அந்த ஆணைக்குழு முன்னிலையிலும் நான் வாக்குமூலம் வழங்குவேன்.
என் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உண்மைகளை மறைக்க முடியாது. உண்மைகள் வெளிவர வேண்டுமெனில் நான் வாக்குமூலம் வழங்கியே தீர வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106