வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்றியுடன் ஏற்பு!
Friday, September 15th, 2023
வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்றியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
புடின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாலும், கிரெம்ளினிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின், புடின் அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தப்பயணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
முக்கியமான உச்சிமாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வட கொரியாவுக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
ஒருவருக்கொருவர் “நண்பர்கள்” என்று அழைத்த இரு தலைவர்களும் நேற்று(13) ரஷ்யாவின் மிக நவீன விண்வெளி ஏவுதளத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
“பேச்சுவார்த்தையின் முடிவில், கிம் ஜோங் உன் வட கொரியாவுக்கு வருகை தருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார்.
“புடின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன், ரஷ்ய – வட கொரியா நட்பின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை எப்போதும் முன்னெடுத்துச் செல்வதற்கான தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்” என்று கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106