தேவைப்பட்டால் வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற்றது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்!

Thursday, September 14th, 2023

ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் 60 விமானிகள் கடந்த ஒரு வருடகாலப்பகுதியில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் புதிதாக விமானிகளை பணிக்கு அமர்த்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் பெற்றுள்ளது.

இதனை ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பிரதம நிறைவேற்று அதிகாரிரிச்சர்ட் நட்டால் உறுதி செய்துள்ளார்.

இலங்கையின் அந்நிய செலவாணி நெருக்கடியும் உயர்வரிகளை விதிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டமும் விமானிகள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு விமானிகள் வெளியேறியமை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தனக்கான விமானிகளை பேணுவதில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடம் 30 விமானிகள் தேவை அடுத்த வருடம் நடுப்பகுதிக்குள்  50 விமானிகள் தேவை  என ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பிரதமநிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதிஸ்டவசமாக தென்கிழக்கு ஆசியாவிலும் வடகிழக்கு ஐரோப்பாவிலும் திறமையான விமானிகள் உள்ளனர்  எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளழட குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106